காமிரா கண்கள்

ரீகன் ராஜ்

Staff Writer

அப்பா ஒரு சிற்பி; அம்மா ஒரு ஓவியர். பிள்ளை ரீகன் ராஜ் ஓவியக்கல்லூரியில் படித்து முடித்துவிட்டு காமிராவும் கையுமாக சுற்ற ஆரம்பித்துவிட்டார். இடையில் மும்பை ஐ.ஐ.டி.யில் டிசைனிங்கில் முதுகலைப்பட்டமும் படித்திருக்கிறார். மனித முகங்களை அவர்களின் வாழிடப் பின்னணியில் அப்படியே பதிவு செய்வதுதான் பிடித்தமானது என்கிற இவர் பயணங்களை நேசிப்பவர். ஆடம்பர திருமணங்களுக்குப் புகைப்படங்கள் எடுப்பதற்காக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது புகைப்படப் பயணங்களையும் மேற்கொள்வதாகச் சொல்லும் ரீகன் உதகமண்டலத்தில் வசிக்கிறார். இவருக்கு வயது 30.

அக்டோபர், 2017.